தனியார் ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை - ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை
பெரம்பலூரில் உள்ள தனியார் ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை, ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே தனியார் ஓட்ட லில் ஒருவர் உணவு அருந்த சென்றுள்ளார். அப்போது அவர் சிக்கன் தந்தூரி ஆர்டர் செய்து, அதனை சாப்பிடும் போது அதன்மேல் உள்ள தோல்கள் ரப்பர் போன்றும், அழுகிய நிலையிலும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஓட்டல் ஊழியர்களை அழைத்து இது என்றைக்கு வாங்கிய இறைச்சி என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் திங்கட்கிழமை வாங்கியது என்று ஒப்பு கொண்டுள்ளனர். இதனை அவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் பழைய பிரியாணியை சூடு செய்து விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஒரு ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்வதை ஊழியர்களை ஒப்புக்கொண்ட நிலையில், இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் பிப்ரவரி. 22ம் தேதி பெரம்பலூரில் உள்ள தனியார் ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை, ஆய்வு நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்புத்துறையினரை கொண்டு உடனே ஆய்வு நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.