ஆத்தூரில் புதிய ரயில்வே மேம்பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்
அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
Update: 2024-02-26 18:00 GMT
சேலம் ரயில்வே கோட்டத்தில் திருப்பத்தூர், மொரப்பூர், பொம்மிடி, ஈரோடு, கோயம்புத்தூர் வடக்கு, மேட்டுப்பாளையம், நாமக்கல் மற்றும் சின்னசேலம் ஆகிய 8 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷனில், ஆத்தூர் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை கோரிக்கை புதுப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், 554 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு, 1500 சாலை மேல் பாலங்கள், பாதாளச் சாலைகள் என, 41 ஆயிரம் கோடி ரூபாயில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த விழாவில் ரயில்வே துறை அதிகாரிகள், பா.ஜகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.