வீரபாண்டி திரவுபதி அம்மன் கோவிலில் சாமி வீதி உலா
விழுப்புரம் மாவட்டம், வீரபாண்டி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள் ளது. இங்கு சித்திரை அக்னி வசந்த உற்சவ விழா கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி விழாவின் முக்கிய நிகழ்வான தேர் மற்றும் தீமிதி திருவிழா கடந்த 29-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எருந்தருளினார். தொடர்ந்து சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி வானவே டிக்கை, ஆடல், பாடல், இசைக்கச்சேரி, கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.