ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்;
Update: 2023-12-21 09:01 GMT
சனிப்பெயர்ச்சி விழா
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் கோவிலில் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பு பரிகார ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து நவகிரக சன்னதியில் அமைந்துள்ள சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார நிவர்த்தி செய்து அர்ச்சித்து வழிபட்டனர்.