சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் சப்தஸ்தான விழா

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-03-15 10:03 GMT

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில்.

இக் கோவில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், திருக்கயிலை சிவ பூத கண திருக்கூட்டத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு வருகிற 27-ம் தேதி ( புதன் கிழமை)யும், சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி 28-ம் தேதி (வியாழக்கிழமை) யும் நடக்கிறது.

Tags:    

Similar News