கங்கைகொண்ட சோழபுரத்தில் சனிபெயர்ச்சி விழா

Update: 2023-12-21 00:32 GMT

சனிபெயர்ச்சி 

சனிபெயர்ச்சியை முன்னிட்டு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆனார். இதனையொட்டி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தாமரைப்பூ வடிவத்தில் ஒரே பீடத்தில் உள்ள சனிபகவானுக்கு சிறப்பு யாகம் நடைப்பெற்றது. பின்னர் பால், தயிர், சந்தனம், புனித நீர் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டது. பின்னர் மகா தீபாரதணை காட்டபட்டது. இதில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Tags:    

Similar News