ஊதியூரில் பள்ளி மாணவன் பேருந்தில் இருந்து விழுந்து படுகாயம்
ஊதியூர் பெட்ரோல் பங்க் நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்த தவறி விழுந்து மாணவர் காயமடைந்துள்ளார்.
காங்கேயம் அடுத்த குள்ளம்பாளையத்தில் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. ஊதியூர் பகுதியை சேர்ந்த சண்முகம் கூலித்தொழிலாளியின் மகன் அபிஷேக்குமார் வயது 16. இந்த சிறுவன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்நிலையில் இன்று மாலை பள்ளி வேலை முடிந்தவுடன் காங்கேயம் பேருந்து பணிமனைக்கு சொந்தமான K 5 என்ற பேருந்தில் குள்ளம் பாளையத்தில் இருந்து ஊதியூர் பெட்ரோல் பங்க் ஸ்டாப்பில் இறங்கி வீடு செல்வது வழக்கம் அதே போல் இன்றும் அந்த பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது படிக்கட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் திடீரெனெ படிக்கட்டில் நிலை தடுமாறி சாலை விழுந்துள்ளார். உடனே சகமாணவர்கள் சத்தமிடவே பேருந்தை நிறுத்தி பார்க்கையில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டிருந்தது.
வலியால் மாணவனும் துடிக்க அருகில் இருந்தவர்கள் அந்த வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பேருந்தில் செல்லும் மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நின்ற பின்னரே படிக்கட்டு பகுதிக்கு வரவேண்டும் அதற்க்கு முன்னாள் படிக்கட்டிற்கு வந்தால் கை தவறியோ அல்லது படிக்கட்டுகள் வலுக்கிவிட்டு இதுபோல் விபத்துக்கள் ஏற்படுகின்றது.
அதே போல் பேருந்து நடத்துனர்கள் மாணவர்களை படிக்கட்டுக்களில் நிற்பதை அனுமதிக்க கூடாது என்கின்றனர் பொதுமக்கள்.