பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு!
நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 15:20 GMT
பள்ளிகள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது . தொடக்க நாளான இன்று மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி ,நோட்டு புத்தகங்கள் வழங்கி மகிழ்ச்சியுடன் ஆசிரியர்கள் வரவேற்றனர்.அப்போது வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், மு.ஊ.ம.தலைவர் மா.ஏழுமலை ,தலைமை ஆசிரியர் காளிமுத்து, ஆசிரியைகள் அலமேலு, சரஸ்வதி ,தெய்வானை ,SMC நிர்வாகிகள் ,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.