அம்பை உதவி சார் பதிவாளர் இல்லத்தில் சோதனை
அம்பை உதவி சார் பதிவாளர் இல்லத்தில் சோதனை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-24 08:50 GMT
உதவி சார்பதிவாளர் இல்லம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பண்ணை சங்கர் ஐயர் தெருவில் வசிப்பவர் வேலம்மாள். இவர் விக்கிரமசிங்கபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார் பதிவாளராக பணி செய்து வருகிறார்.
இவர் மீது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து வருமானத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து நேற்று (பிப்.23) இவரது வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் எந்தவித ஆவணமும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.