இரண்டாம் நிலை காவலர் உடற்திறன் தேர்வு

தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறைகளின் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

Update: 2024-02-09 05:18 GMT

நீளம் தாண்டுதல் 

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்களில் முதற்கட்டமாக 470 பேருக்கு 07.02.2024 அன்று  சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சியான 303 விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி நேற்று காலை முதல் உடல் திறனாய்வு தேர்வான கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர்,  200 மீட்டர் ஓட்டம் ஆகியவை  தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஈரோடு சிறப்பு படை காவல்துறை தலைவர் எஸ். முருகன் மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில்  நடைபெற்றது.
Tags:    

Similar News