திருப்பூர் தெற்கு சட்டமன்ற வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் தெற்கு சட்டமன்ற வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-16 12:04 GMT
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் 2024-நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி 114-தெற்கு சட்டமன்ற வாக்கு சாவடி மையங்களில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், திருப்பூர் மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் யாதவ் கிரிஷ் அசோக், தெற்கு உதவி காவல் ஆணையர் நந்தினி மற்றும் காவல் ஆய்வாளர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.