செய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் வருசாபிசேகம்

செய்துங்கநல்லூரில் உள்ள பழமையான சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் வருசாபிசேகம் நடந்தது.

Update: 2024-06-02 09:14 GMT

வருசாபிசேகம் 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள பழமையான சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் வருசாபிசேகம் நடந்தது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, புன்யாகவாசனம், வேதிகார்ச்சனா, ஸ்ரீ ருத்ர ஹோமம் நடந்தது. காலை 10.30மணிக்கு விமான கோபுரம் , மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிகேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன் பின் மலை 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் மற்றும் வி.கோவில்பத்து பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆன்மிக பேரரவை சார்பில் ஆலய அர்ச்சகர் முத்துராமன், அறங்காவலர் மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News