மக்களுக்கு டீ வழங்கிய சித்த மருத்துவமனை
உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் சார்பில் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.;
Update: 2024-05-19 08:17 GMT
மக்களுக்கு டீ வழங்கிய சித்த மருத்துவமனை
உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பொது மருத்துவ துறை சார்பில் நேற்று (மே 18) சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் மலர்விழி தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மக்களுக்கு செம்பருத்தி டீ, வெண்தாமரை மணப்பாகு பானம், நன்னாரி ஊறல் குடிநீர், மோர் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.