சிவகங்கை : சாரதி செயலி குறித்து செயல் விளக்க கூட்டம்

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாரதி செயலியில் உள்ளீடு செய்வது குறித்து செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-15 05:59 GMT

செயல் விளக்க கூட்டம் 

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர்கள் தங்களது விவரங்களை சாரதி செயலியில் உள்ளீடு செய்வது குறித்த செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட தகவல் அலுவலா் சாதிக், உதவி தகவல் அலுவலா் ராஜகுரு ஆகியோா் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இது குறித்து சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூக்கன் கூறியதாவது: 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் புதிய ஓட்டுநா் உரிமம் பெற அல்லது பழைய ஓட்டுநா் உரிமத்தை புதுப்பிக்க பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எனவே, தகுதி வாய்ந்த மருத்துவா்கள் தங்களது பதிவுச் சான்று எண், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சாரதி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவா்கள் மட்டுமே இந்த சாரதி செயலியில் விண்ணப்பதாரா்களுக்கான மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியும் என தெரிவித்தார்

Tags:    

Similar News