சிவகங்கையில் திட்டக்குழு கூட்டம்- மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.;
By : King 24x7 Website
Update: 2023-10-19 10:53 GMT
சிவகங்கை திட்டக்குழு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட திட்டக்குழுத் தலைவர் திரு.பொன்.மணிபாஸ்கரன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட திட்டக்குழு துணைத்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட திட்டக்குழுவின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதில், மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களின் பொதுப்பற்றுடன் கூடிய அணுகுமுறைகளை உருவாக்கி, அனைத்துப் பகுதிகளிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிக்காத்தல் போன்ற பணிகளையும், மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக இயற்கை வளம் மற்றும் மனித வளம் தொடர்பான அனைத்து விபரங்களையும் சேகரித்து தகவல் தளம் அமைத்தல், பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுத்தல், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான உத்திகள், திட்டங்கள் ஆகிய பணிகள் தொடர்பான செயலாக்கத்தினை ஆய்வு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாகவும், இக்குழுவின் வாயிலாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.