ஸ்மார்ட் இண்டியா ஹேக்கத்தான் -2023

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-12-23 06:13 GMT

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  

திண்டுக்கல் : கல்வி அமைச்சகத்தின் புத்தாக்க பிரிவு மையம், பி.எஸ்.என்.ஏ. பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 இறுதி போட்டி தொடக்க விழா. பி.எஸ்.என்.ஏ.பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. 210 பங்கேற்பாளர்கள் கொண்ட 35 அணிகள் பங்கேற்றது. ரயில்வே அமைச்சகம், வீட்டு வசதி, நகர்புற விவகார அமைச்சகம் சார்பில் 5 சிக்கல் அறிக்கைகளுக்கு வழங்கிய பிரச்னையான தீர்வை பி.எஸ்.என்.ஏ.பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி சார்பாக மாணவர்கள் சமர்ப்பித்தனர். ஒவ்வொரு பிரச்னைக்குமான தீர்வுக்கான பரிசு தொகை ரூ.1லட்சம் என்ற ரீதியில் பரிசுகளை மாணவர் அணிகள் வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் வாசுதேவன், தலைமை விஞ்ஞானி பிரசாந்த குமார் பாண்டா பரிசு வழங்கினர்.
Tags:    

Similar News