சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் வெப்ப தோஷ பூஜை
தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் வெப்ப தோஷ பூஜை நடைபெற்றது.
சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சுவாமியின் மீது தாரா பாத்திரம் வைத்து அக்னி நட்சத்திர கால அதீத வெப்ப தோஷத்தை போக்குவதற்கான வழிபாடு நடத்தப்பட்டது. அதிகவெப்பம் காரணமாக பூமி வெப்ப மயமாவதை குறைத்திடும் வகையில் அனைத்து சிவன் கோவில்களிலும் சுவாமியின் மீது தாரா பாத்திரம் கட்டுவது வழக்கம்.
இதனால் கோடை மழை பெய்து வெயிலின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம். இவ்வாண்டின் அக்னி நட்சத்திர தோஷம் நேற்று துவங்கியதை முன்னிட்டு தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சுவாமியின் மீது சொட்டு சொட்டாக நீர் வடியும் வகையில் தாரா பாத்திரம் வைத்து வெயிலின் தாக்கம் குறைக்கும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வரும் 28-ம் தேதி அக்னி நட்சத்திர தோஷம் நீங்கும் வரை இந்த வழிபாடு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.