சாரதா ஆசிரமத்தில் சிறப்பு பூஜை
உளுந்தூர்பேட்டையில் உள்ள சாரதா ஆசிரமத்தில் சாரதா அம்பா ஜெயந்தி விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்;
Update: 2024-01-04 09:35 GMT
சாரதா ஆசிரமத்தில் சிறப்பு பூஜை
உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் சாரதா அம்பா ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 8.30 மணியளவில் சாரதா அம்பா சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேர் வலம் வந்தது. பின்னர் சாரதா அம்பாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது. சாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம பிரியா அம்பா தலைமையில் சிறப்பு ஹோமம் தீபாரதனை வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.