மாம்பட்டில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
சிறப்பு அபிஷேகமும் ஊஞ்சல் ஊர்சவமும் நடைபெற்றது
Update: 2023-12-16 06:01 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, காலை மூலவர் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பகவதி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறப்பு ஹோமம் மற்றும் மூலமந்திர பாராயணம் நடைபெற்றது. பின்னர், மாலையில் உற்சவர் அம்மனுக்கு 32 திரவியங்களால் மகாபிஷேகம் நடைபெற்றது. அம்மனுக்கு நாகாத்தம்மன் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா நடைபெற்றது. பின்னர், இரவு அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் அமாவாசை உற்சவ குழுவினர் பூஜைகளை மேற்கொண்டனர்.