ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பூஜை
ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள குருசாமி பாளையத்தில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1 முதல் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதமிருந்து சபரிமலை சென்று வருகின்றர். அதன்படி கடந்த 40 ஆண்டுகளாக சபரிமலை சென்று வரும் பக்தர்கள் சார்பாக தொடர்ந்து 41.-ம் ஆண்டு சபரிமலை யாத்திரை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும்,கல்வி, செல்வம், மற்றும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற ஸ்ரீ ஐயப்ப சாமிக்கு லக்ஷர்ச்சனை, 108 வலம்புரி சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம், மற்றும் பூஜையும் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு பால், தயிர் மஞ்சள் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பன் அருள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை சிவஸ்ரீ மு. பழனிச்சாமி சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ மு.ரத்னசபாபதி சிவாச்சாரியார், நடத்தி வைத்தனர். மேலும் இதில் வி.கே. செல்வராஜ் ராஜகுருசாமி, மற்றும் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.