திண்டுக்கல்லில் அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

திண்டுக்கல்லில் அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2024-01-08 11:51 GMT

அன்னதானம் வழங்கல் 

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பொது மக்களுக்கு அன்னதானத்தை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் துணை மேயர் ராஜப்பா துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மேயர் கூறியதாவது: அமைச்சர் உடல் நலமும் மனநலமும் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ன பிரார்த்தனை செய்தோம்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அமைச்சர் ஆன்மீக பக்தி கொண்டவர். அவர் சிறப்புடன் தொண்டர்களை அரவணைத்து செல்வதில் எப்போதும் சிறப்பு பெற்றவர். அவர் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறோம், என்றார்.

Tags:    

Similar News