ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-04-24 01:01 GMT

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் மற்றும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. அவ்வகையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமபத வாசல் கொண்ட திருக்கோயிலான ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் ரங்கசாமி குளம் அருகே அமைந்துள்ளது.

எட்டு கைகளுடன் பிரம்மாண்டமாக நின்ற கோலத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் எம்பெருமானை நாள்தோறும் ஆயிரக்கணக்கான தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாத இருந்த நிலையில் தற்போது மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு இந்த வருடம் நடைபெறுகிறது.

இன்று அதிகாலை 7 மணியளவில் கொடிமரம் அருகே ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருள கொடி மரத்தில் கருட உருவம் குறித்த பிரம்மோற்சவ கொடி பட்டாச்சார்யார்களால் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபர வாகனத்தில் வீதி உலா வந்த எம்பெருமானை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசித்து சென்றனர். காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் உற்சவர் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளார்.

Tags:    

Similar News