ஸ்ரீ மதுரை வீரன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ஸ்ரீ மதுரைவீரன் கோவிலில் பால்குட ஊர்வலம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு;
Update: 2024-03-11 06:12 GMT
பால்குட வைபவம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன் திருக்கோவிலில் மாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு பால்குட வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சுவாமி வேடம் அணிந்து நகர தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து மங்கள வாத்தியங்களுடன் சாமியாட்டம் ஆடியபடி ஊர்வலமாக வலம் வந்தனர். தொடர்ந்து கோவிலை அடைந்து சுவாமிக்கு பால் குடங்களை சமர்ப்பித்தனர். பின்னர் பக்தர்கள் சமர்ப்பித்த பாலால் மதுரை வீரன் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தாயார்கள் சமேத ஶ்ரீ மதுரை வீரன் சுவாமிக்கு சந்தனம் காப்பு சாற்றி சிறப்பு அலங்காரம் செய்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்தனர். நிறைவாக தீப தூப ஆராதனை காண்பித்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மதுரை வீரன் சுவாமியை வழிபட்டனர்.