75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஓவிய போட்டி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 75வது குடியரசுதின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஓவிய போட்டி ராசிபுரம் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி ஓவியங்களை சிறப்பாக வரைந்தனர். இதில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ், கார்த்தி ,சிவகுமார் பாலாஜி ,அருள் , ரேஷ்மா யோகலட்சுமி ஆகியோர்கள் கலந்து கொண்டு பரிசு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். இதனை மாணவ மாணவிகள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.