பள்ளி மாணவி திடீரென மாயம் - காவல்துறை விசாரணை
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வீட்டிலிருந்து வெளியே சென்ற பள்ளி மாணவி திடீரென மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-04-21 14:35 GMT
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான பள்ளி மாணவி.இவர் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார்.இந்நிலையில் துறையூர் அருகே புலிவலம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்காக வந்துள்ளார். அப்போது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற பள்ளி மாணவி திடீரென மாயமானார். அவரது பெற்றோர்கள் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து புலிவலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான பள்ளி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.