தரமற்ற முறையில் நடைபெறும் கட்டிடப் பணி
நிலக்கோட்டையில் தரமற்ற கட்டிடப் பணி நடந்து வருவதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 07:33 GMT
தரமற்ற முறையில் நடைபெறும் கட்டிடப் பணி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் தங்கும் விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் பேஸ் மட்டத்திற்காக குப்பைகள் சூழ்ந்த பாலித்தின் பை துணி உள்ளன. தேவையுள்ள மண்ணை பேஸ் மட்டத்திற்கு ஒப்பந்ததாரர் பயன்படுத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300மாணவிகள் தங்கும் விடுதி தரமற்ற முறையில் தற்போதைய கட்டப்பட்டு வருகிறது.இது இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் தங்கும் விடுதி என்பதால் அதிகாரிகள் சிரமம் எடுத்து தரமாக கட்டிடங்கள் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.