நெடுஞ்சாலையில் காய்ந்த செடிகளில் திடீர் தீ: வாகன ஓட்டிகள் அவதி
தேசிய நெடுஞ்சாலையோரம் காய்ந்த செடிகள் திடீரென தீப்பிடித்து எரிவதால், வாகன ஓட்டிகள் புகை மற்றும் வெப்பத்தால் அவதியடைந்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-27 09:33 GMT
சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் காய்ந்த செடிகள் திடீரென தீப்பிடித்து எரிவதால், வாகன ஓட்டிகள் புகை மற்றும் வெப்பத்தால் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயில் துவங்குவதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்து கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிலையில், சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், மரங்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் காய்ந்து சருகுகளாக மாறி வருகின்றன. இவை, உச்சி வெயிலின் போது தீடிரென தீப்பிடித்து எரிந்து, காய்ந்து கிடக்கும் செடிகளில் வேகமாக தீ பரவுகிறது. இதிலிருந்து வெளியேறும் வெப்பம், புகையினால் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.