ஊட்டியில் கோடைகால கவியரங்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடைகால கவியரங்கம் நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 11:11 GMT
கவியரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்
பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பாக கோடைக்கால கவியரங்கம் ஒய்.எம்.சி.ஏ., ஆனந்தகிரியில் நடந்தது. ஒம்.எம்.சி.ஏ., மேலாளர் பேட்ரிக் டைட்டஸ் வரவேற்றார். எழுத்தாளர் ராமகிருஷ்ணன் இயற்றிய தேஷாந்தரி என்ற நூல் குறித்து கவிஞர் வித்யாதரன் விளக்கினார்.
கவிஞர் ஜனார்தனன் தலைமையில் நடந்த கவியரங்கில் தொலைந்த வசந்தம், நீயே என் நிம்மதி, நானிலத்து நறுந்தேன், பூவிடுதூது, கருகிடும் தளிர்கள் என்ற பல்வேறு தலைப்புகளில் நீலமலை ஜே.பி, ரமேஷ், புலவர் சோலூர் கணேசன்,
வில்லியம்ஸ், பைந்தமிழ் பாதுகாப்பு இயக்கம் தலைவர் துரை அமுதன், மாரியப்பன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். சுந்தரபாண்டியன் நன்றி கூறினார். புலவர் நாகராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.