நெல்லையில் மின் களப்பணியாளர்களுக்கு ஹெல்மெட் வழங்கல்

நெல்லையில் மின் களப்பணியாளர்களுக்கு அலாரத்துடன் கூடிய ஹெல்மெட் வழங்கப்பட்டது.

Update: 2024-06-28 10:39 GMT

பணியாளர்களுக்கு ஹெல்மெட் வழங்கல்

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் உத்தரவின்படி, பாளையங்கோட்டை வட்டாரம் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மின் களப்பணியாளர்களுக்கு அலாரத்துடன் கூடிய ஹெல்மெட்டுகள் நேற்று (ஜூன் 27) வழங்கப்பட்டது.

மின்கம்பத்தில் ஏறும்போது, மின்னோட்டம் இருந்தால் இந்த ஹெல்மெட்டில் அலாரம் ஒலித்து எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News