ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா
குறிஞ்சிபாடி பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைப்பெற்றது.;
Update: 2024-04-21 06:07 GMT
ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.