சிலம்பம் மற்றும் ஆயுதப் பயிற்சி முகாம் நிறைவு விழா

புதுக்கோட்டையில் சிலம்பம் மற்றும் ஆயுதப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ஏராளமானொற் கலந்து கொண்டனர்.

Update: 2024-05-12 06:16 GMT

சிலம்பம் பயிற்சி நிறைவு

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பாக சிலம்பம் மற்றும் ஆயுதப் பயிற்சி முகாம் நிறைவு விழா பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் ஆலோசனைக் கூட்டம் சம்ஸ்க்ருத வித்தியாலய ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, விழாவில் இந்திய சிலம்ப வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை ஏற்க,சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை மாவட்ட குத்து சண்டை கழக தலைவர் SVS.ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி. கண.மோகன்ராஜ் , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் கே.பி.அசோகன், புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் சேது கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

கௌரவ விருந்தினர்களாக சிட்டி ரோட்டரி சங்க பொருளாளர் சங்கர்,உறுப்பினர் ராமகிருஷ்ணன், நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம்,அரசு பள்ளி காப்போர் சங்கத் தலைவர் அருள் செல்வகாந்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் ,பத்து நாட்களாக பயிற்சி பெற்ற வீரர்கள் வீராங்கனைகள் சிலம்பம் மற்றும் ஆயுதக் கலை சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்திக் காட்ட விழாவில் பயிற்சி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக புத்தாஸ் வீர கலைக்கழக பயிற்சியாளர் சுஜிதா வரவேற்புரையாற்ற, இன்ட்ராக்ட் சங்க தலைவர் ஷாலினி நன்றி கூறுகையில் சம்ஸ்க்ருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியின் தலைவர்,இளைய மன்னர் ராஜ்குமார் விஜயகுமார் இந்த கலை வளர்வதற்கு பேரு உதவி செய்தமைக்கும் நன்றி கூற வீரர்கள் வீராங்கனைகள் பெற்றோர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News