வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் தை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 13ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

Update: 2024-02-05 03:02 GMT

கொடியேற்றம் 

திருவள்ளூர் பகுதியில் அமைந்துள்ள 108.திவ்ய தேசங்களில் வைணவ தளமாக விளங்கும் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று தை பிரம்மோற்சவ விழா அதிகாலை வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு அதிகாலை ஐந்து மணிக்கு கோவில் மூலவர் அறையிலிருந்து உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியுடன் பள்ளக்கில் ஊர்வலமாக வந்து செல்வர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையடுத்து கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்து உற்சவ பெருமாளுக்கும் கொடி மரங்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது, யாக சாலை மண்டபத்தில் இருந்து யாகம் செய்யப்பட்ட தீர்த்த கலசங்கள் மற்றும் கருட கொடியை எடுத்து வந்து கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து கொடி மரத்தில் அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் கொடி ஏற்றமானது நடைபெற்றது.  கொடி மரத்திற்க்கும் செல்வர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உற்சவ பெருமாளுக்கும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்தக் கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவ பெருமாளை தரிசித்துச் சென்றனர். நேற்று தொடங்கிய கொடியேற்றமானது வரும் 13-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது ஆறாம் தேதி அதிகாலை கருட சேவையும் பத்தாம் தேதி காலை தேர் பவனி ஆனது நடைபெற உள்ள நிலையில் திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தை பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News