இருளர் பழங்குடி மக்களுக்கு நீதி கேட்டு தமிழ்ப் பழங்குடி குறவன் சங்கம் முறையீடு

இருளர் பழங்குடி மக்களுக்கு நீதி கேட்டு தமிழ்ப் பழங்குடி குறவன் சங்கம் முறையீடு செய்துள்ளனர்.

Update: 2024-02-17 09:14 GMT

தமிழ்ப் பழங்குடி குறவன் சங்கம் முறையீடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி கிராமத்தில் பழங்குடி இருளர் காலணியில் வசித்துவரும் மக்கள் ஆட்டுப்பட்டியை வைத்து ஆடு வளர்த்து தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர். தங்கள் வயிற்றைக் கழுவும் வாழ்வாதாரமாக உள்ள பட்டிகளில் வளர்த்து வரும் இந்த ஆடுகளை அடையாளம் தெரியாத சிலர் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளனர். பட்டியில் உள்ள தங்கள் ஆடுகளில் 14 ஆடுகளைக் கழுத்தறுத்து, அவற்றில் 7 ஆடுகளை அங்கேயே போட்டுவிட்டு மீதமிருந்த 7 ஆடுகளை ஒரு டாட்டா ஏஸ் வாகனத்தில் தூக்கிக் கொண்டு திருடிச் சென்றிருக்கின்றனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்தில் முறையாக புகார் அளித்திருக்கின்றனர். ஆனால் எவ்விதமான நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது ஏன் என காவல் நிலையத்தை பலமுறை நாடி வந்த நிலையில் தமிழ்ப் பழங்குடி குறவன் சங்க நிர்வாகிகளை நேரில் சென்று உதவக் கோரி கோரிக்கை. வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் சென்று மனு அளித்தனர் சங்கத்தின் மாநில தலைவர் கோவிந்தராஜி, மாநில பொதுச் செயலாளர் .ரவி, மாநில செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி பெறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News