கோயில் கும்பாபிஷேகம் விழா
கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 09:11 GMT
கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்கள்
பட்டிவீரன்பட்டி, : வத்தலக்குண்டு அருகே எஸ்.தும்மலப்பட்டி முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து தேவராட்டம் ,மேளதாளங்கள் முழங்க புனித நீர் கடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ,கோபுர விமானங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கந்தப்ப ஆதினம் திருநாவுக்கரசு, சோமசுந்தரம் குழுவினர் செய்தனர். அன்னதானம் நடந்தது.