குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக ஊழியர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை மண்டல பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-14 05:30 GMT

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் சம்பள குறைப்பு ஆட்குறைப்பு கைவிடவும் குறைந்தபட்ச ஊதியம் வங்கியில் வழங்கவும்,ஊதியத்திற்கு ஏற்ற இஎஸ்ஐ பிஎப் குரூப் இன்சூரன்ஸ் வழங்கவும் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கவும் வலியுறுத்தி மதுரை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தென் மாவட்ட குடிநீர் வழங்கும் ஊழியர்களின் (குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக ) காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

.இந்தக் காத்திருப்பு போராட்டத்தில் சிஐடியு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் தெய்வராஜ் மாவட்ட செயலாளர் லெனின் துணைத்தலைவர் சந்தியாகு மத்திய அமைப்பு நிர்வாகிகளின் தோழர்கள் அழகுமலை சோனைகருப்பையா சிவபெருமாள் ஆஞ்சி பஞ்சாட்சரம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News