தற்காலிக அரசு பேருந்து ஓட்டுனர் கைது
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனரைத் தாக்கிய தற்காலிக அரசு பேருந்து ஓட்டுனர் கைது
By : King 24x7 Angel
Update: 2024-02-10 09:59 GMT
மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் பள்ளியின் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் திருவிடைமருதூரை சேர்ந்த வேங்கடசாமி(50). இவர் சம்பவ தினத்தன்று சேத்திரபாலபுரம் வழியாக மயிலாடுதுறையை நோக்கி பேருந்து ஓட்டிச் சென்றுள்ளார். முன்பு சென்ற அரசு பேருந்து வழி கொடுக்காததால் அந்த பேருந்தை முந்திக்கொண்டு கோவிந்தராஜ் பள்ளி பேருந்தை ஓட்டினார். தம்மை முந்தி சென்றதால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் பாலமுருகன்(25) பள்ளி வாகனத்தை நிறுத்தி அதை ஒட்டி வந்த வெங்கடசாமியை திட்டி கட்டையால் தாக்கிப் போட்டுவிட்டு சென்று விட்டார். இது குறித்து வெங்கடசாமி குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலமுருகன்மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலமுருகன் தற்காலிக அரசு பேருந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.