பெண் பார்க்க போனதால் வந்த சோகம் - போலீசார் தூக்கிட்டு தற்கொலை
முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை;
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குலசேகரப்பேரி பகுதியைச் சார்ந்தவர் இசக்கி என்பவரது மகன் மூர்த்தி (வயது 30). இவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். மூர்த்திக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து பெண் ஒருவர் நிச்சயம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்பொழுது அந்தப் பெண் மூர்த்தியை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம். இதனால் மன வேதனை மூர்த்தி நேற்று மாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.