தென்காசி : இரவில் இடியுடன் கூடிய கனமழை
இரவு நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி;
Update: 2023-12-10 02:37 GMT
மழை
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று காலை முதலே சற்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் திடீரென்று இரவு இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளுக்கு நீர் வரத்தும் அதிகரிக்க துவங்கியதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.