டிரைவர் மயங்கி விழுந்து பலி: உணவு சாப்பிட்டபோது பரிதாபம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உணவு சாப்பிட போது டிரைவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-05-20 10:41 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் மணி(23). கீரனூர் பகுதியில் வாடகைக்கு இயங்கி வரும் கதிர் அறுக்கும் இயந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டில் நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது விக்கல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கீரனுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிந்து அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.