10 பேரிடம் வனத்துறையினர் விசாரணை

நத்தம் அருகே அரசுக்கு சொந்தமான கிணற்றில் காட்டெருமை இறந்து கிடந்தது தொடர்பாக, வனத்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Update: 2023-12-14 11:46 GMT

 நத்தம் அருகே அரசுக்கு சொந்தமான கிணற்றில் காட்டெருமை இறந்து கிடந்தது தொடர்பாக, வனத்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை-பிள்ளையார் நத்தம் பகுதியில் அரசுக்கு சொந்தமான கிணற்றில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. அதன் பேரில் அங்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட வீரர்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இறந்த காட்டெருமையை மீட்டனர். கால்நடைதுறையினர் இறந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர். காட்டெருமை செல்லும் வழியில் ஏன் கிணறு வெட்டப்பட்டது. காட்டெருமை விழுந்த தோட்டத்தில் உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News