திமுக நிர்வாகியின் இல்லத்துக்குச் சென்று மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கிப்பட்டியில் திமுக நிர்வாகியின் இல்லத்திற்கு சென்ற எம்எல்ஏ கதிரவன் திருமண மணமக்களை வாழ்த்தினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-25 17:09 GMT
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம் பாளையம் ஊராட்சியில் உள்ள வடக்கிப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி.இவர் திமுகவின் கிளை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய மகன் முத்து.இவர் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க திருச்சி மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
முத்துவின் திருமணம் நேற்று அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு எம் எல் ஏ கதிரவன் நேரில் வர இயலாத காரணத்தினால் இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.