திருவள்ளூரில் திட்டக்குழுக் கூட்டம் திட்டுதல் குழு கூட்டமாக முடிந்தது
திருவள்ளூரில் திட்டக்குழுக் கூட்டம் திட்டுதல் குழு கூட்டமாக முடிந்தது
Update: 2024-02-12 09:10 GMT
திருவள்ளூரில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழுக் கூட்டத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக, மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பிரச்சினைகள் பற்றியும், அதிகாரிகள் மீது புகார்கள் பற்றி மட்டுமே பேசியதால், கடைசிவரை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் பற்றி எதையும் பேசாமல், திட்டக்குழுக் கூட்டம் திட்டுதல் குழு கூட்டமாகவே நிறைவுபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர், கூடுதல் ஆட்சியர் சிவபுத்திரா மற்றும் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருவாய் துறை அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் திட்ட குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்காமல், தங்கள் குறைகளை புகார்களாகவும், குற்றச்சாட்டுகளாகவும் அரசு மீதும் அதிகாரிகள் மீதும் சரமாரியாக மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சாட்டி பேசினர். இதனால் ஒரு கட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பொறுமையை இழந்து, “இக்கூட்டம் கூட்டப்படுவதின் நோக்கமே மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றி அதை மாநில திட்டக் குழுவிற்கு அனுப்புவதுதானே தவிர, குறைகள் புகார்கள் தெரிவிக்கும் கூட்டம் அல்ல, இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உணர்ந்து கொண்டு வளர்ச்சி பணிகள் குறித்து குறித்து விவாதிக்கலாம்” என்று அமைச்சர் முன்னிலையில் எடுத்துரைத்தார். வரவு, செலவு கணக்குகளை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சமர்ப்பிக்கவில்லை என்று கட்சி பேதமின்றி அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து குறைகளை தெரிவித்து வந்தனர். மேலும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பராபட்சத்துடன் இருப்பதாக தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து குற்றம்ச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பல முறை எடுத்துரைத்தபோதும், மாவட்ட திட்டக் குழுக் கூட்டம் முடியும் வரை அதிகாரிகள் பற்றியும் நடைபெறும் முறைகேடுகள் பற்றியும் உள்ளாட்சி பிரதிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும், அழைக்கப்படவில்லை என்றும் புறக்கணிக்கப்படுவதாகவே தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். இதனால் இக்கூட்டம் எதற்காக கூட்டப்பட்டதோ, அதுபற்றி எந்தவொரு ஆலோசனைகளும், விவாதங்களும் நடைபெறாமல் மாவட்ட குறை தீர்க்கும் கூட்டமாகவே தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. ஒரு கட்டத்தில் மாவட்ட ஆட்சியர், “மாவட்டத்தில் தொழில்கள் துவக்கமும் அனுமதி பெறவும் 14 ஒன்றியங்களில் உள்ள அலுவலர்களிடம் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றது. தொழில் முதலீட்டாளர்கள் தாங்கள் தொழில் துவங்க முறையாக அனுமதி கொடுக்க காலதாமதம் செய்வதோடு, உள்நோக்கத்திற்காக மனுக்களை கிடப்பில் போடப்படுவதாகவும் மறைமுகமாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்” என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காமல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மழுப்பலாக பதிலாக எடுத்துரைத்தினர மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து விவாதம் நடத்தாமல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்போல, மக்கள் பிரதிநிதிகள் குறைதீர் கூட்டமாக நடைபெற்று முடிந்தது. இக்கூட்டத்தில் எவ்வித முடிவு எடுக்க முடியாமல் கூட்டம் எதற்காக கூட்டப்பட்டதோ அதற்காக கூட்டம் நிறைவு பெறாமல் கூட்டம் மாவட்ட பிரதிநிதிகளின் குறைதீர்க்கும் கூட்டமாக மாறியது. மொத்தத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டமானது உள்ளாட்சி பிரதிநிதிகளின் திட்டுக்குழு கூட்டமாக நிறைவுபெற்றது.