10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-23 12:56 GMT
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய்த்துறை சங்க அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அனைத்து பணிகளையும் புறக்கணித்து இன்று 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து நிலை அலுவலகங்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வருவாய்த்துறை அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.