விஷம் கலந்த மதுவை வாயில் ஊற்றி தந்தையை கொலை செய்த மகன் !
குளச்சல் அருகே விஷம் கலந்த மதுவை வாயில் ஊற்றி தந்தையை கொலை செய்த மகனால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-08 11:20 GMT
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் வேதக்கண் (85) இவரது மனைவி 27 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். வேதக்கண் தற்போது தனது மூன்றாவது மகன் சுனில் சிங் (34)என்பவருடன் வசித்து வந்தார். சுனில் சிங்குக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். தனது தந்தை வேதக்கண்ணிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுனில் சிங் தனது தந்தையிடம் தகராறு செய்து, அவர் வைத்திருந்த மதுவை வலுக்கட்டாயமாக தந்தையின் வாயில் ஊற்றி குடிக்க வைத்துள்ளார். இதில் வேதக்கண்ணுக்கு உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டு, சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வேத கண்ணை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வேதக்கண் குளச்சல் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வேதக்கண் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். மதுவில் விஷம் கலந்து கொடுத்ததால் வேதக்கண் இறந்ததாக தகவல் பரவி உள்ளது. இது குறித்த தகவலின் பேரில் குளச்சல் போலீசார் வேதக்கண் உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் வேதக்கண் எப்படி இறந்தார் என்பதை உறுதியாக கூறமுடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.