இரணியல் அருகே திருட்டு பைக்கில் நகை பறித்த வாலிபர்கள்

இரணியல் அருகே பைக்கை திருடி நகை பறிப்பில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-16 04:25 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆளுர் பகுதியை சேர்ந்த அருள் தாஸ் மகன் அஜின் (25) என்பவர் நாகர்கோவில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவரிடம் இருந்து ரூபாய் 40 ஆயிரம் கொடுத்து பைக் வாங்கியுள்ளார்.   இந்த நிலையில் பைக்கில் வேலைக்கு சென்று விட்டு கடந்த 14ஆம் தேதி அதிகாலை சுமார் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பு பை கை  நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்த போது பைக்கை காணவில்லை. இது தொடர்பாக அஜித் இரணியல் போலீசில் புகார் அளித்துள்ளார். 

Advertisement

 இதனிடையே  தலக்குளம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து நகை பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்து. நடத்திய  விசாரணையில் அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் காணாமல் போன அஜின் என்பவரது பைக் என்று தெரிய வந்தது. இதை அடுத்து அர்ஜின் புகார் சம்பந்தமாக இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை கைப்பற்றினர்.

Tags:    

Similar News