கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.;
Update: 2024-04-25 04:53 GMT
உற்சவம்
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. தினசரி காலை, மாலை சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. அலங்காரங்களுக்குப்பின் பெருமாள் மண்டபத்தில் சுவாமியை எழுந்தருள செய்தனர். மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் வழிபாடுகளை செய்து வைத்தனர்.