திருவண்ணாமலை - ரூ.3கோடியில் திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை
கம்மகுல நாயுடுகள் சத்திர நிர்வாக நலச்சங்க சார்பில் ரூ.3கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
திருவண்ணாமலை ராஜராஜன் தெருவில் கம்மகுல நாயுடுகள் சத்திர நிர்வாக நலச்சங்க சார்பில் புதியதாக ரூ.3கோடி மதிப்பில் அபிராமி ஏசி திருமண மண்டபம் புதியதாக கட்ட சங்கத்திற்கு உட்பட்ட விவகார எல்லையான 30 ஊர்களுக்கு தலா 4 பொறுப்பாளர்களை நியமித்து அந்த குழுவின் ஆலோசனைப்படியும் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை ராஜராஜன் தெருவில் கம்மகுல நாயுடுகள் சத்திர நிர்வாக நலச்சங்க சார்பில் புதியதாக ரூ.3கோடி மதிப்பில் அபிராமி ஏசி திருமண மண்டபம் புதியதாக கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி கட்டிட பணிக்குழு தலைவர் எம்.சின்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்டிட பணிக்குழு உறுப்பினர்கள் வி.அண்ணாதுரை கே.சம்பத் வழக்கறிஞர் ஜி.புகழேந்தி கே.அண்ணாதுரை பி.வி.ஆர்.செல்வம் பி.பிரேம்நாத் கே.சுப்பராயலு பி.திருநாவுக்கரசு மற்றும் தொழிலதிபர் ஆகாஷ் முத்துகிருஷ்ணன் அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வி.தனுசு எழுத்தாளர் ந.சண்முகம் பாவலர் ப.குப்பன் எக்ஸ்னோரா இந்திரராஜன் மற்றும் வியாபாரிகள் சங்கம் பிரதிநிதிகள் நகர முக்கிய பிரமுகர்கள் அரட்டவாடி, பொரசப்பட்டு, நாராயணகுப்பம், தென்கரும்பலூர் மூங்கில்துறைபட்டு, ஈருடையாம்பட்டு, அரும்பாராம்பட்டு, அருளம்பாடி ,உலகளப்பாடி, வடபொன்பரப்பி, பரம்மகுணடம், ரங்கப்பனூர், புத்திராம்பட்டு, புதுப்பேட்டை ,ராவத்தநல்லூர், புதூர் கானாங்காடு, கடுவனூர் பாக்கம், தொழுவந்தாங்கல், பெரியகொள்ளியூர், நகல்குடி, ஓடியந்தல், அருதங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் கம்மகுல நாயுடுகள் சத்திர நிர்வாக நலச்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கட்டிட பணி குழு தலைவர் சால்வை அணிவித்து கௌரவித்ததோடு பிரசாதமும் வழங்கினார்.