திருவண்ணாமலை : மூதாட்டிக்கு சிகிச்சையளிக்க பேரம் பேசிய அரசு மருத்துவர்..!

திருவண்ணாமலை கை உடைந்த மூதாட்டிக்கு சிகிச்சையளிக்க பணம் கேட்டு அரசு மருத்துவர் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-10-29 03:41 GMT

மூதாட்டிக்கு சிகிச்சையளிக்க பேரம்பேசிய அரசு மருத்துவர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கே.எஸ்.கே நகரைச் சேர்ந்த சபையா பேபி வீட்டில் படியில் இறங்கும்போது கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக  வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்கள், எலும்பு முறிவு மருத்துவர் அருண் மகேஷ் இல்லை எனக் கூறி, அவரது தொலைபேசியை எண்ணை மூதாட்டியிடம் கொடுத்துள்ளனர். அந்த எண்ணிற்கு மூதாட்டியின் உறவினர் தொடர்பு கொண்டு பேசியபோது,  மருத்துவர் மகேஷ், மூதாட்டியை தொலைபேசி வாயிலாக தனியார் மருத்துவமனைக்கு வருமாறும், அதற்காக 30,௦௦௦ ரூபாய் செலவாகும் எனவும் பேரம் பேசியுள்ளார்.  இந்த ஆடியோ தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களை, அரசு மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைக்கு வரவைத்து சிகிச்சை என்ற பெயரில் பணம் பறிக்கும் நடவடிக்கைளில் ஈடுபடுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி, தொடர்புடைய மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News