சட்டவிரோத கள் விற்பனை
கரூர் மாவட்டம், தம்மாப்பட்டி பகுதியில் சட்டவிரோத கள் விற்பனையில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-04-25 12:12 GMT
கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 24ஆம் தேதி பாலவிடுதி காவல் எல்லைக்குட்பட்ட கம்மாபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்குள்ள பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது.
இந்த கள் விற்பனையில் ஈடுபட்ட சங்கரன்கோவில், வெள்ளக்குளம் அருகே கரைகண்டார்புலம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் துரைசாமி வயது 38 என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 2 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக துரைசாமி மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.