திமிரி பேரூராட்சியில் மன்ற கூட்டம்

திமிரி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மாலா இளஞ்செழியன் தலைமையில் நடந்தது.

Update: 2024-06-29 11:34 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் மாலா இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்க பேசுகையில் 2½ ஆண்டுகளாகியும் பேரூராட்சி வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கான பணிகள் நடைபெற்றதா? என்பது தெரிவதில்லை.

மாதத்துக்கு ஒரு முறை மன்ற கூட்டத்திற்கு வந்து கையொப்பம் இடுவது மட்டும்தான் உறுப்பினர்களுடைய பணியாக உள்ளது என்று கூறி வருகை பதிவேடு மற்றும் தீர்மான பதிவேடுகளில் கையொப்பமிடாமல் பெண் கவுன்சிலர் ஒருவர் வெளியேறினார். அதேபோன்று துறைசார்ந்த அலுவலர்களுக்கும் முறையான அழைப்புகள் பேரூராட்சியின் சார்பில் வழங்கப்படுவதில்லை என்றும்,

மன்ற கூட்டம் என்பது கடமைக்காக நடத்தப்படுகின்றதே தவிர பொது மக்களின் நன்மைக்காக இல்லை என்று வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டி, வரும் காலங்களில் பேரூராட்சி மன்ற கூட்டம் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News